புகையிரதம் மோதி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் ம ரணமடைந்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற புகையிரதம் வவுனியா, புளியங்குளம், பரிசங்குளம் புகையிரதக் கடவையில் பயணித்த போது புகையிரதத்தில் மோதுண்டு பரிசங்குளம் இந்தியன் வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் விக்கினன் என்பவர் ம ரணமடைந்துள்ளார்.

இது தொடர்பான விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.





