மாகாணமட்டப் போட்டியில் முதலிடம் பெற்ற வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களுக்கு கௌரவிப்பு!!

819

வடமாகாண மீலாத் விழாப் போட்டியில் முதலாமிடம் பெற்ற வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலய மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று (25.10) இடம்பெற்றது. குறித்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் ஏ.கே.உபைத் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது வடமாகாண மீலாத் விழா போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று தேசிய மட்டப் போட்டிக்கு செல்லும் குறித்த பாடசாலையின் 7 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் சிரேஸ்ட ஆண்கள் பிரிவு பேச்சுப் போட்டியில் முதலாமிடம் பெற்ற ஜே.எம்.பஸால், கனிஸ்ட பெண்கள் பிரிவு கசிதா போட்டியில் முதலாமிடம் பெற்ற ஜே.தஸ்லிம்பானு, எஸ்.சஸ்னா, ஜே.எப்.ஜெனீரா, எவ்.நுசைரா, ஜே.எப்.சிப்லியா,  என்.எப்.அப்னான் ஆகிய மாணவர்கள் வெற்றிக் கிரீடம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில் பிரதி அதிபர் எம.ராசிக், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.