வவுனியாவில் தீபாவளியினை முன்னிட்டு 70 குடும்பங்களுக்கு உலர்உணவுப் பொதிகள்!!

575

தீபாவளியினை முன்னிட்டு..

தீபாவளி திருநாளை முன்னிட்டு வவுனியா மாவட்டத்திலுள்ள வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பத்தினரின் நலனை கருத்தில்கொண்டு தமிழ் விருட்சம் அமைப்பின் வேண்டுகோளுக்கிணங்க லண்டன் வாழ் சட்டத்தரணி இ.இரட்னசிங்கம் மற்றும் அவரது மகள் வைத்திய கலாநிதி திருமதி மு.தர்சினி,

அவரது மகன் குமரன் மருமகள் திருமதி கு.மாயா அவர்களின் நிதிப்பங்களிப்பில் வறுமைக்கோட்டிற்குட்பட்ட 70 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (26.10.2018) காலை வவுனியா பிரதேச கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது.

வவுனியா செட்டிக்குளம், புளியங்குளம், கனகராயன்குளம், நெடுங்கேணி , தாலிக்குளம், சிதம்பரபுரம் போன்ற பல்வேறு பின்தங்கிய கிராமங்களை சேர்ந்த பெண் தலைமைத்துவம், மற்றும் மாவீர, முன்னாள் போ ராளி, கணவன் கா ணாமல் போன வறுமைக்கோட்டிற்குட்பட்ட 70 குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, 5 கிலோ மா என அத்தியாவசிய 10 பொருட்களடங்கிய உலர் உணவுப் பொதிகள் வழங்கிப்பட்டிருந்தன.

இந் நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் மாணிக்கம் ஜெகன், உறுப்பினர்களான இராமச்சந்திரன், விக்னா, மாதவன், ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டு உலர்உணவுப் பொதியினை வழங்கி வைத்தனர்.