வவுனியாவில் காணப்பட்ட மர்மப் பொதி : அச்சத்தில் மக்கள்!!

812

அச்சத்தில் மக்கள்

வவுனியா – குருமன்காட்டுச் சந்திக்கு அண்மித்த பகுதியில் காணப்பட்ட ம ர்மப் பொதியினால் சற்று நேரம் குழப்பமான நிலமை ஏற்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இன்று இரவு 7.30 மணியளவில் குருமன்காட்டுச் சந்தியில் நிறுத்தபட்டிருந்த வாகனத்தில் பயணித்த சிலர் மர்மப் பொதி ஒன்றினை வீதி ஓரத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.

இதனால் சந்தேகம் அடைந்த அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் அவசர பொலிஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் குறித்த பொதியினை சோதனை செய்து பார்த்த போது அதனுள் கழிவுப்பொருட்கள் இருந்துள்ளன.

சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவை பார்வையிட்ட போது வாகனத்தில் வந்தவர்கள் அந்த பொதியினை வீதி ஓரத்தில் போட்டுவிட்டு சென்றதை அவதானித்ததுடன், வாகன இலக்கங்களையும் பொலிஸார் பதிவு செய்துள்ளனர்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் சற்று நேரம் குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது.