தபால் மூல வாக்களிப்பு

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் நாளையும் நடைபெறவுள்ளது.

வவுனியாவில் எதிர்வரும் 16ம் திகதி நடைபெறவுள்ள 7வது ஜனாதிபதித் தேர்தலின் தபால்மூலம் வாக்களிக்க தகுதிபெற்றோர் இன்று காலை 7.00 மணி முதல் வாக்களிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸார், தேர்தல் அலுவலகங்கள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து அரச நிறுவனங்களின் அதிகாரிகள் இன்றும் நாளையும் தபால் மூலம் வாக்களிக்க முடியும் என வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காலை வேலையிலேயே பெருந்தளவான அரச ஊழியர்கள் தமது வாக்களிப்பு உரிமையினை பயன்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





