இளம்பெண்

பல்வரிசை சரியில்லை எனக்கூறி மனைவிக்கு முத்தலாக் அளித்துள்ள அ திர்ச்சி சம்பவம் இந்தியாவின் தெலங்கானாவில் நிகழ்ந்துள்ளது. ஹைதராபாத்தில் வசித்து வருபவர் ரக்ஷனா பேகம். அவரது கணவர் முஸ்தபா. தனக்கு பல் வரிசையாக இல்லை எனக் கூறி தனது கணவர் முஸ்தபா பலமாதங்களாக தன்னை த வறாக பேசி வந்ததாக ரக்ஷனா பேகம் தெரிவித்துள்ளார்.

திடீரென ஒரு நாள் அவர் தனக்கு மூன்று முறை தலாக் கூறிவிட்டுச் சென்றுவிட்டதாகவும், தான் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, இருவருக்கும் இடையில் எவ்வித உ றவும் இல்லை என அவர் கூறியதாகவும் ரக்ஷனா தெரிவித்துள்ளார். எனவே தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என ரக்ஷனா பேகம் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பேசிய ரக்ஷனா, ”திருமணத்தின் போது முஸ்தபா குடும்பத்தினர் கேட்டதையெல்லாம் நாங்கள் செய்தோம். ஆனால் திருமணத்துக்கு பிறகும் நகை வேண்டும், பணம் வேண்டுமெனக் கேட்டு அவர்கள் என்னை சி த்ரவ தை செய்தனர்.

என் சகோதரரிடம் இருந்த இரு சக்கர வாகனத்தையும் முஸ்தபா எடுத்துக்கொண்டார். என்னை தொடர்ந்து து ன்புறுத்திய முஸ்தபா, என் பற்கள் வரிசையாக இல்லையெனக்கூறி என்னை பிடிக்கவில்லை எனத் தெரிவித்தார்.

முஸ்தபா குடும்பத்தினர் என்னை 10-15 நாட்கள் வீட்டுக்குள்ளேயே அ டைத்து வை த்திருந்தனர் என தெரிவித்துள்ளார் தற்போது முத்தலாக் தடை சட்டம் அமலில் உள்ளது. அதன்படி, த டையை மீறி முஸ்லிம் ஆண் ஒருவர் முத்தலாக் கூறி மனைவியை விவாகரத்து செய்தால், அவர் மூன்று ஆண்டுகள் சி றைவாசம் அனுபவிக்க நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.




