வவுனியாவில் விவசாய நிலமாக மாறிய மன்னார் பிரதான வீதி!!

589

மன்னார் பிரதான வீதி

வவுனியா மன்னார் பிரதான வீதி விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்து வீதியின் நடுவே வாழை மரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

வவு­னியா மன்­னார் முதன்மை வீதி, நெளுக்­கு­ளம் ஊடாக வீரபுரம் செல்­லும் வீதி, பூவ­ர­சங்­கு­ளம் ஊடாக செட்­டி­கு­ளம் செல்­லும் வீதி, குழு­மாட்­டுச் சந்­தி­யூ­டாகச் சுந்­த­ர­பு­ரம் செல்­லும் வீதி, பிரமனா­லங்கு­ளம் பெரிய தம்­பனை வீதி, கோவில்­குளம் ஊடாக சிதம்­ப­ர­பு­ரம் செல்­லும் வீதி,

ஓமந்தை சேம­மடு வீதி, சாந்­த­சோலை – பூந்­தோட்­டம் பிர­தான வீதி உள்­ளிட்ட மக்­கள் பாவனை அதி­க­முள்ள வீதி­கள் அடங்­க­லாக வவு­னியா மாவட்­டத்­தின் மூன்­றில் இரண்டு பகுதி மக்­கள் பயன்­ப­டுத்­து­கின்ற வீதி­கள் அனைத்­தும் போக்­கு­வ­ரத்­துக்கு ஒவ்­வாத வீதி­க­ளா­கவே காணப்ப­டு­கின்றன.

வடக்­கின் மிக முக்­கிய போக்­கு­வ­ரத்து மைய­மான வவு­னி­யா­வின் வீதி­கள் சீர­ழிந்து உள்­ளமை வவு­னியா மக்­க­ளுக்கு மட்­டு­மன்றி வேறு மாவட்­டங்­க­ளில் இருந்து வரும் மக்­க­ளுக்­கும் சிர­மத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது.

குறிப்­பாகத் தின­மும் மன்­னார் நக­ரத்­தில் இருந்­தும் மன்­னார் மாவட்­டத்­தின் எல்­லைப்­புறக் கிரா­மங்­க­ளில் இருந்­தும் வவு­னி­யா­வுக்­குப் பய­ணம் செய்­யும் ஆயி­ரக் கணக்கானவர்க­ளும் இத­னால் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

போ ர்க் காலங்­களை விட தற்­போது தான் வீதி­க­ளின் நிலை கேவ­ல­மாக உள்­ளன. அதே நேரத்தில் கண்துடைப்பிற்காக குழிகளை அடைக்கும் பணிகளே வருடாவருடம் இடம் பெறுகின்ற போதும் குழிகளும் முழுமையாக அடைக்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந் நிலையில் பிரமணாலங்குளம் பகுதியில் வவுனியா மன்னார் பிரதான வீதியில் வீதியின் நடுவே மன்னார் வீதி விவசாய நிலமாக மாற்றப்பட்டுள்ளது என்ற வாசகத்தினை தாளில் எழுதி அதனை வாழை மரத்தில் கட்டி வாழை மரத்தினை வீதியில் நடுவே காணப்பட்ட குழியினுள் நாட்டப்பட்டுள்ளது.

10வருடங்களுக்கு மேலாக குன்றும் குழியுமாக காணப்படும் வவுனியா – மன்னார் பிரதான வீதி எப்போது செப்பனிடப்படும்?