காதலனை பழிவாங்க அவரின் ஆபாசப் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட காதலி!!

656

Maleகனடாவை சேர்ந்த பெண் ஒருவர், முன்னாள் காதலனை பழிவாங்குவதற்காக அவரின் ஆபாச புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கனடாவை சேர்ந்த விக்டோரியா(16) என்ற பெண் நபர் ஒருவரை காதலித்து வந்தார். கடந்தாண்டு செப்டம்பர் மாதம் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக பிரிந்து விட்டனர், இதன்பின் விக்டோரியாவின் காதலன் வேறொரு பெண்ணை காதலிக்க தொடங்கினார்.

இதனை ஜீரணித்துக் கொள்ள முடியாத விக்டோரியா முன்னாள் காதலனை பழிவாங்க வேண்டும் என்பதற்காக அவரின் ஆபாச படங்களை இணையத்தில் வெளியிட்டார். அதுமட்டுமில்லாமல் காதலன் பற்றிய ரகசிய தகவல்களை, அவரது தற்போதைய காதலிக்கும் அனுப்பி பழிதீர்த்து கொண்டார்.

இதனை தொடர்ந்து விக்டோரியா மீது வழக்கு பதிவு செய்த பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வழக்கறிஞர் மாக்கி கிரிஸ்டோபர், விக்டோரியாவின் கொடியச் செயல் மிகவும் வருத்தத்திற்கு உரியது என்றும், கனடாவின் சட்டத்தின்படி இது தவறானது எனவும் தெரிவித்துள்ளார்.