சிரமதானப் பணி

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்திற்கு அமைய ‘மனிதர் நேசிக்கும் சுகாதார மிக்க சுற்றாடலை உருவாக்குவோம்’ எனும் கருப் பொருளில்,

வவுனியா பொலிஸாரின் ஏற்பாட்டில் சந்தை பின் சுற்றுவட்ட வீதியினை சுத்தம் செய்யும் சிரமதானப் பணி இன்று (28.11.2019) காலை 10 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது.

இச் சிரமதானப் பணியில் வவுனியா பொலிஸாருடன் இணைந்து சந்தை வர்த்தகர்களும் இணைந்து கொண்டிருந்தனர்.

இதன் போது சந்தை பின் சுற்றுவட்ட வீதியில் சிரமதான பணிகள் முன்னெடுக்கப்பட்டதோடு வடிகான்களும் சுத்தம் செய்யப்பட்டது.





