வவுனியாவில் வீடொன்றினுள் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவர் கைது!!

796

சகோதரர்கள் மூவர் கைது

வவுனியா – பூந்தோட்டம் அண்ணாநகர் பகுதியிலுள்ள வீடொன்றினுள் புதையல் தோண்டிய சகோதரர்கள் மூவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டினை சுற்றிவளைத்த போதே சகோதரர்களான 16, 19, 21 வயதுடைய சந்தேகநபர்கள் சிக்கியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட மண்வெட்டி, சவல் உள்ளிட்ட சில பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றபட்டுள்ளன.

கைது செய்யபட்டவர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.