வவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்பு : 5க்கு மேற்பட்ட நிலையங்களில் மக்கள் தங்கவைப்பு!!

539

வவுனியாவில் கடும் மழை

வவுனியாவில் கடும் மழை காரணமாக 769 பேர் பாதிப்படைந்துள்ளதுடன் அவர்கள் 5க்கு மேற்பட்ட நிலையங்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று (06.12.2019) காலை 9 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் ஐ.எம். ஹனீபா தெரிவித்தார்.

வவுனியாவில் மழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் அவர் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வவுனியாவில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாக 253 குடும்பங்களைச் சேர்ந்த 769 அங்கத்தினவர்கள் இது வரை 5க்கு மேற்பட்ட நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்குரிய சமைத்த உணவுகள் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினுடாக பிரதேச செயலகங்கள் ஊடாக வழங்கப்படுகின்றது.

மேலும் வவுனியா மாவட்டத்திலுள்ள குளங்களில் 95 வீதமான குளங்கள் தற்போது வான்பாய்கின்றன. அத்துடன் வவுனியாவில் ஒரேஒரு குளம் மாத்திரம் (உடையார்கட்டுகுளம்) மாத்திரம் உடைந்துள்ளது.

அந்த குளம் கமநல சேவைகள் திணைக்களத்தின் நிதி ஏற்பாட்டுடன் குளம் திருத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

அத்துடன் குளங்களின் மேலதிக நீரை போக்குவதற்காக கமக்கார அமைப்பும் கமநல திணைக்களமும் இணைந்து சில முன் ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் என தெரிவித்தார்.