மாணவன்

வவுனியா – சிதம்பரபுரம், வன்னிகோட்டம் பகுதியில் இன்று (10.12.2019) காலை இடம்பெற்ற விபத்தில் மாணவன் ஒருவர் பரிதாபமாக ப லியாகியுள்ளார்.

வவுனியாவிலிருந்து சிதம்பரபுரம் நோக்கிச் சென்ற தனியார் பேருந்து, மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரியவருகிறது.

இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஆச்சிபுரம் பகுதியை சேர்ந்த புண்ணியகுமார் பகிரதன் (வயது 16) என்பவரே உ யிரிழந்துள்ளார்.

குறித்த மாணவர் தற்போது இடம்பெற்று வரும் க.பொ.த சாதாரண பரீட்சையில் தோற்றி வந்தவர் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இதேவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்றொரு இளைஞர் ப டுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளார்.

உ யிரிழந்தவரின் ச டலம் வவுனியா வை த்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான மேலதிக வி சாரணைகளை பொ லிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




