வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் அதிரடியாக கைது!!

613

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில்..

வவுனியா புதிய பேரூந்து நிலையத்தில் இரு இளைஞர்கள் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று (11.12.2019) மாலை 5 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா புதிய பேரூந்து நிலையப் பகுதியில் விசேட க ண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிசார் யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்த பேரூந்தில் இருந்து இறங்கி சென்ற இரு இளைஞர்களையும்,

அவர்களது பொதிகளையும் சோதனை செய்த போது பொக்கற்றுக்குள் கேரள க ஞ்சாவினை இரு இளைஞர்களும் வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டதுடன், உடமையில் இருந்த க ஞ்சாவும் மீட்கப்பட்டத்தாக பொலிசார் தெரிவித்தனர்.

வவுனியா, கணேசபுரம் பகுதியைச் சேர்ந்த 19 மற்றும் 18 வயதுடைய இரு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த வவுனியா ம து போ தைவஸ்து தடுப்புப் பிரிவு பொலிசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.