கழிவுகளை சேகரிக்கும் மையம்

வவுனியா நகரசபை பூங்கா வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையம் இன்று (17.12.2019) மதியம் 2.30 மணியளவில் திறந்து வைக்கப்பட்டது.

பிளாஸ்டிக் மற்றும் அது தொடர்பான பொருட்களை மனிதஇனம் பயன்படுத்துவது தவிர்க்க இயலாத தோழமையாக இருந்து வருகிறது.

அனைத்து இடங்களிலும் (நிலைகளிலும்) பிளாஸ்டிக்குகளைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாத ஒன்றாகத் திகழ்கிறது. பிளாஸ்டிக் பொருளை மீள் சுழற்சிக்கு உட்படுத்தி சுற்றுப்புற சூழனை பாதுகாக்கும் நோக்கில்,

கொகாகோலா நிறுவனத்தின் நிதி அனுசனையுடன் ஆசிய மன்றத்தின் ஒழுங்கமைப்பில் வவுனியா நகரசபையின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை சேகரிக்கும் மையத்தினை,

வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் பற்றிக் றஞ்சன், வவுனியா நகரசபை தவிசாளர் தவிசாளர் இ.கௌதமன் , உபநகரபிதா சு.குமாரசாமி, கொகாகோலா நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் லக்சன் மதுருசிங்க , ஆசிய மன்றத்தின் இலங்கைக்கான பிரதி வதிவிட பிரதிநிதி ஜோகான் ரேபட் ஆகியோர் இணைந்து நாடா வெட்டி திறந்து வைத்தனர்.

அத்துடன் மாணவர்களிடமிருந்து பிளாஸ்டிக் போத்தல் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன் டிஜிட்டல் தொழிநுட்பத்துடன் கூடிய அங்கத்துவ அட்டை (PET) வழங்கி வைக்கப்பட்டது.

இந் நிகழ்வில் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் காஞ்சன , வவுனியா தெற்கு பிரதேச சபை தவிசாளர் து.நடராஜசிங்கம் , நகரசபை செயலாளர் இ.தயாபரன், வர்த்தகசங்க தலைவர் சுஜன் சண்முகராஜா,

கொகாகோலா நிறுவனத்தின் அதிகாரிகள் , ஆசிய மன்றத்தின் அதிகாரிகள், நகரசபை உறுப்பினர்கள், நகரசபை ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





