வவுனியா கு த்துச்ச ண்டை வீரர்கள் பாகிஸ்தான் செல்ல உதவி கோரி டக்ளஸ் தேவானந்தாவிடம் மனு!!

669

வவுனியா கு த்துச்ச ண்டை வீரர்கள்..

இலங்கை கு த்துச்ச ண்டை தேசிய அணியில் தெரிவு செய்யப்பட்ட கு த்துச்ச ண்டை வீரர்கள் இன்று (19.12.2019) வவுனியாவில் கடற்தொழில் நீரியல்வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்தனர்.

வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் மக்கள் சந்திப்பு ஒன்று இன்று மேற்கொள்ளப்பட்ட நிலையிலேயே வவுனியா கு த்துச்ச ண்டை வீரர்கள் சர்வதேச போட்டிகளில் கலந்துகொள்வதற்கு பாகிஸ்தானுக்கு செல்ல தெரிவாகியுள்ள நிலையிலேயே அமைச்சருடனான சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

எதிர்வரும் 05.01.2020 அன்று இலங்கை தேசிய கு த்துச்ச ண்டை அணியுடன் பாகிஸ்தான் பயணமாகவுள்ள வவுனியா வீரர்களை சந்தித்த அமைச்சர் அவர்களின் பி ரச்சனையை கேட்டறிந்து கொண்டதுடன் கு த்துச்ச ண்டை வீரர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் அமைச்சரிடம் கையளித்திருந்தனர்.

மகஜரை பெற்றுக்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சாதகமான முறையில் பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதியளித்தார்.