வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் படுகாயம்!!

495

வாகன விபத்தில்..

வவுனியாவில், இ ராணுவ முகாமிற்கு அருகில் நேற்று (21.12.2019) மாலை ஏற்பட்ட வாகன விபத்தில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த குறித்த பெண் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகின்றார்.

யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த கார் ஒன்றினை அதே திசையில் பயணித்த தனியார் பேருந்து ஒன்று பின்புறமாக மோ தியதிலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்திற்குள்ளான காரில் யாழ்ப்பாணத்தில் பணியாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் அவரது குடும்பத்தினர் பயணித்ததாக தெரியவருகின்றது.

இந்நிலையில், இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.