வவுனியாவில் சிறுவர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு மற்றும் பிரமாண்ட நடன நிகழ்வு!!

702

நடன நிகழ்வு

வவுனியாவில் மேலைத்தேய நடனக் கல்லூரியின் ஆண்டு விழா இன்று (22.12.2019) மாலை 3 மணி தொடக்கம் 7 மணிவரை வவுனியா கலாசார மண்டபத்தில் நடனக் கல்லூரியின் பயிற்றுவிப்பாளர் சுஜித் தலைமையில் நடைபெற இருக்கின்றது.

இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக திருமதி.கீதாஞ்சலி நகுலேஸ்வரன், கௌரவ விருந்தினராக கசுன் சுமதிபால,  சிறப்பு விருந்தினராக V. பிரதீபன், விருந்தினர்களாக M.மயூரன், T. தமிழழகன் ஆகியோர் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

பிரம்மாண்டமான நடன நிகழ்வு மற்றும் சிறுவர்களின் ஆடை அலங்கார அணிவகுப்பு (Children Fashion Show) என்பன இடம்பெற இருக்கின்றது. அனைவரையும் விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றனர். அனுமதி முற்றிலும் இலவசம்.