வவுனியாவில் வீதிக்கு இறங்கிய முதலை மக்களினால் மடக்கிப்பிடிப்பு!!

680

திக்கு இறங்கிய முதலை

வவுனியா – மன்னார் பிரதான வீதியில் வேப்பங்குளம் வவுனியா தெற்கு பிரதேச சபை முதலாம் ஒழுங்கையில் குடிமனைக்குள் புகுந்த 8அடி நீளமான முதலை பொதுமக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று (21.12.2019) இரவு 11..30 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த வீதியில் 8 அடி நீளமான முதலை ஒன்று குடிமனைக்குள் புகுந்துள்ளது. முதலையின் நடமாட்டத்தினை அவதானித்து நாய்கள் குரைத்தமையினையடுத்து வீட்டின் உரிமையாளர் வீட்டிற்கு வெளியே சென்று பார்வையிட்ட சமயத்தில் முதலையினை அவதானித்துள்ளார்.

அதனையடுத்து அயலவர்களுக்கு இவ்விடயத்தினை தெரியப்படுத்தியமையினையடுத்து உடனடியான அயலவர்களின் உதவியுடன் இரவிரவாக பல மணிநேரம் போ ராடி அதிகாலை குறித்த முதலையை ம டக்கிப் பிடித்து கட்டி வைத்தனர்.

அதன் பின்னர் நெளுக்குளம் பொலிசார் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு தெரியப்படுத்தியதையடுத்து இன்று (22.12.2019) காலையில் அவ்விடத்திற்கு வருகை தந்த வனஜீவராசிகள் திணைக்களத்தினர் முதலையினை கட்டி எடுத்துச் சென்றனர்.