வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் வர்த்தகப் பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை!!

773

கிருஷ்ணகுமார் கிஷாந்தன்

இந்த வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்த பரீட்சை பெறுபேறுகள் நேற்று (27.12.2019) பிற்பகல் பரீட்சை திணைக்களத்தால் வெளியிடப்பட்டது.

வெளியான பெறுபேறுகளின்படி வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலய மாணவன் வர்த்தக பிரிவில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற கிருஷ்ணகுமார் கிஷாந்தன் என்ற மாணவனே இவ்வாறு வர்த்தக பிரிவில் வவுனியா மாவட்டத்தில் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 5ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 31ஆம் திகதி வரை நடைபெற்ற க.பொ.த. உயர்தர பரீட்சையில் 337,704 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.