வவுனியாவில் கூலி வேலை செய்யும் தந்தையை தனது சாதனை மூலம் பெருமைப்படுத்திய மாணவன்!!

1101

கணேசமூர்த்தி கலையரசன்

பின்தங்கிய கிராமத்திலிருந்து தினமும் 3 கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் சென்று படித்து சிறந்த பெறுபேற்றை பெற்றுள்ளேன் என வவுனியா மாவட்டத்தில் வர்த்தகப் பிரிவில் இரண்டாவது இடத்தினை பெற்ற கணேசமூர்த்தி கலையரசன் தெரிவித்தார்.

வெளியாகிய உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயத்தினை சேர்ந்த கணேசமூர்த்தி கலையரசன் 2AB சித்திகளைப் பெற்று மாவட்டத்தில் இரண்டாவது நிலை பெற்றுள்ளார்.

தனது பரீட்சைப் பெறுபேறு குறித்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் கடந்த முறை கடந்த முறை கா.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி ஏ,2பி பெறுபேற்றினை பெற்றேன். அப்போது அத்துடன் எனது படிப்பினை முடிந்துக்கொள்ள முனைந்தேன்.

எனது ஆசிரியர்கள் என்னை மீண்டும் பரீட்சையில் தோற்றுமாறு தெரிவித்து எனக்கு அறிவுரை வழங்கியதன் பின்னர் எனது குடும்பத்தின் எதிர்காலத்தின் நலனையும் எனது நலனையும் கருத்தில் கொண்டு இந்த முறை பரீட்சைக்கு தோற்றினேன்.

எனது கிராமம் ஓர் பின்தங்கிய கிராமமாகும். அங்கிருந்து தினசரி மூன்று கிலோமீற்றர் தூரம் துவிச்சக்கரவண்டியில் பயணித்து பாடசாலைக்கு சென்று எனது கல்வியினை மிகவும் கஸ்டத்தின் மத்தியிலும் தொடர்ந்தேன்.

எனது குடும்பம் வறுமைகோட்டிற்குட்பட்டதாகும். தந்தை கூலி வேலை செய்துதான் என்னை படிப்பித்தவர். அண்ணாவும் கூலி வேலை தான் செய்து வருகின்றார். எனது குடும்பத்தில் படித்தது நான் மட்டும் தான்.

அத்துடன் எதிர்கால மாணவர்கள் குடும்ப நிலையோ வறுமையோ நினைத்து துவண்டு விடாமல் கல்வியை தொடர்ந்தால் வெற்றியை அடைய முடியும். எனது எதிர்கால இலட்சியம் சிறந்த கணக்காளராக வருவதே ஆகும் என தெரிவித்தார்.