வவுனியாவில் விவசாயக்குளம் உடைப்பெடுத்ததால் 120 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு!!

379

120 ஏக்கர் நெற்செய்கை பாதிப்பு

வவுனியா – ஈச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட கள்ளிக்குளம், விவசாயக்குளம் நேற்றிரவு உடைப்பெடுத்ததன் காரணமாக 120 ஏக்கர் நெற்செய்கை பாதிப்படைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக குளத்தின் கீழ் விதைக்கப்பட்டு அறுவடைக்காலம் நெருங்கிய நெற்பயிர்கள் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளதால் விவசாயிகள் பாரியளவில் நஷ்டமடைந்துள்ளனர்.

2011ஆம் ஆண்டு புனரமைக்கபட்ட கள்ளிக்குளத்தில் இம்முறை அதிகளவு மழைவீழ்ச்சி காரணமாக குளம் நீரினால் நிரம்பி காணப்பட்டது.

இந்நிலையில் குளக்கட்டில் சிறியளவு துவாரத்தின் ஊடாக நீர் கசிந்து படிப்படியாக அரிக்கப்பட்டு உடைப்பெடுத்துள்ளது. இதன்காரணமாக 120 ஏக்கர் பரப்புடைய நெற்பயிர்ச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு ஏக்கர் நெற்செய்கைக்கு சுமார் 35,000 தொடக்கம் 40,000 ரூபாய் வரை செலவு செய்து பயனடையவிருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறு நெற்செய்கை பாதிப்படைந்ததால் விவசாயிகள் பல்வேறு நெ ருக்கடிகளுக்குள் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.