வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரினால் 50 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்!!

795

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள்

வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தினரினால் பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று (09.01.2020) இடம்பெற்றது.

முச்சக்கரவண்டி உரிமையாளர்களின் பிள்ளைகளின் கல்வியினை ஊக்குவிக்கும் பொருட்டு தரம் ஒன்றுக்கு பாடசாலைக்கு சேரவுள்ள 50 பிள்ளைகளுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் ரவீந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முச்சக்கரவண்டி உரிமையாளர்கள், சாரதிகள், அவர்களின் பிள்ளைகள், சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.