
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்த்- நடிகை ஜூலி கேயட் உறவு குறித்த ரகசியங்கள் மீண்டும் அம்பலமாகியுள்ளன.
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்சுவா ஒலாந்துக்கும், பிரபல நடிகை ஜூலி கேயட்டும் ரகசியமாக பழகி வருவதாக பிரபல பத்திரிக்கையில் ஆதாரங்களுடன் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இச்செய்தி வெளியிட்ட பத்திரிகைக்கு ஜனாதிபதி கண்டனம் தெரிவித்ததுடன், அந்தரங்க விடயங்களை வெளியிட யாருக்கும் அனுமதி இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நடிகை ஜுலி கேயட் செய்தி வெளியிட்ட பத்திரிகை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த பத்திரிகை மேலும் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் நடிகை ஜுலி மற்றும் ஜனாதிபதி ஒலாந்த் கடந்த 2 ஆண்டுகளாக ரகசியமாக பழகி வருவதாக தெரிவித்துள்ளது.
மேலும் நடிகை ஜுலியை கடந்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளருக்கு போட்டியிட்ட செகோயின் ராயல் என்பவர் ஒலாந்துக்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஜோடி பிரான்ஸ் ஜனாதிபதி மாளிகையின் எலிசி அரண்மனை கட்டிடம் அருகே மறைமுகமாக சந்தித்து வந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெறும் தனது காதலி வேலரியை ஒலாந்த் சந்தித்தாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.




