பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவர் 377 அடி உயரத்தில் நண்பரின் கையை மட்டும் பிடித்து தொங்கி சாதனை படைத்துள்ளார்.
பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஜேம்ஸ் கிங்ஸ்டன்(23) தனது தாயாருடன் சௌதாம்ப்டன் நகரில் வசித்து வருகிறார்.
கிரேன்கள் மற்றும் ரேடியோ கோபுரங்களில் ஏறி சாதனை படைப்பதில் ஜேம்சுக்கு ஆர்வம் அதிகம். சமீபத்தில் இவர் எந்தவித உயிர் பாதுகாப்பு சாதனங்களையும் அணிந்து கொள்ளாமல், உக்ரைன் நாட்டில் உள்ள 377 அடி உயரம் கொண்ட மாஸ்கோ பாலத்தில் மேலே ஏறி சாதனை படைத்துள்ளார்.
தனது நண்பரின் கையை மட்டும் பிடித்துக் கொண்டு பாலத்தின் கீழே செல்லும் வாகனங்களை அவர் கண்டு ரசித்தது மெய்சிலிர்க்க வைப்பதாக உள்ளது.
அதிக அளவு உயரமுள்ள நினைவு சின்னங்களில் ஏறி சாதனை படைப்பதில் முதன்மையான வீரர் என்ற பெயரெடுப்பதே ஜேம்சின் லட்சியம் ஆகும்.






