சீனாவில் பெண்களின் விகிதம் குறைந்து வருவதால் அந்நாட்டில் 3.4 கோடி ஆண்கள் வெளிநாட்டினரை திருமணம் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
உலகில் மக்கள்தொகை அதிகம் கொண்ட நாடு சீனா. 2013ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அந்நாட்டில் 69.7 கோடி ஆண்கள், 66.3 கோடி பெண்களும் உள்ளனர்.
அந்த வகையில் பெண்களை விட 3.4 கோடி ஆண்கள் அதிகமாக உள்ளனர். இதனால் வெளிநாட்டுப் பெண்களை மணக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆண்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சீனாவில், பெண்களின் எண்ணிக்கையும் குறைந்து திருமண வயதுக்கான ஆண்-பெண் விகிதாச்சாரம் சமமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வியட்நாம் பெண்களை திருமணம் செய்துகொள்வதிலும், பெண்களின் விகிதத்தை சமப்படுத்தவும் சீன ஆண்கள் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளனர்.




