புற்றுநோயால் ம ரணத்தை எதிர்நோக்கியிருந்த பெண் : அறுவை சிகிச்சையில் தெரியவந்த ஆச்சரிய உண்மை!!

298

புற்றுநோயால்..

கனேடிய பெண் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு, அவர் தனது மர ணத்தை எதிர்நோக்கியிருந்த நிலையில், அறுவை சிகிச்சை ஒன்றில் அவருக்கு இருந்தது புற்றுநோயே அல்ல என்ற உண்மை தெரியவந்துள்ளது.

ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த Cassidy Armstrong (36)க்கு பல ஆண்டுகளாக வலது பக்க மார்பின் கீழ் வலி இருந்துள்ளது. ஆனால், அவர் மருத்துவமனைக்கு செல்லாமலே இருந்திருக்கிறார்.

ஒரு கட்டத்தில், உடல் மெலிய ஆரம்பித்து, சாப்பிட, தூங்க பி ரச்சினை ஏற்பட்டதையடுத்து மருத்துவமனைக்கு சென்ற Cassidyக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு, அவரது கல்லீரலில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து 2019ஆம் ஆண்டு, Cassidyக்கு அறுவை சிகிச்சை ஒன்று செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை செய்து அந்த கட்டியை அகற்றிய மருத்துவர்களுக்கே ஒரு ஆச்சரியம் காத்திருந்தது.

காரணம், அந்த கட்டி புற்றுநோய்க்கட்டியே அல்ல. அது ஒருவகை நாடாப்புழுவால் ஏற்பட்ட கட்டி. மரணத்தை எதிர் நோக்கியிருந்த Cassidyயிடம், மருத்துவர்கள் அவருக்கு வந்திருந்தது புற்றுநோயே அல்ல என தெரிவிக்க, மகிழ்ச்சியின் எல்லைக்கே சென்றுவிட்டார் அவர்.

கல்லீரலில் அந்த நாடாப்புழு இருந்ததாலும், அதன் முழு உடல் பாகங்களையும் மருத்துவர்கள் அகற்றிவிட்டார்களா இல்லையா என்பது உறுதியாகத் தெரியாததாலும், Cassidy வாழ்நாள் முழுமைக்கும் மருந்து சாப்பிடவேண்டும்.

என்றாலும், தனக்கு புற்றுநோய் என அறிவிக்கப்பட்டு, நாட்களை எண்ணிக்கொண்டிருந்த ஒருவருக்கு புற்றுநோயே இல்லை என்று தெரியவந்தது மகிழ்ச்சிக்குரிய விடயம்தானே!