பரபரப்பை ஏற்படுத்திய கழிவறைகள்!!

583

Toilet

ரஷ்யாவில் வினோதமான முறையில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ள சம்பவம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. ரஷ்யாவின் வோல்கோகிராட் நகர் அருகில் உள்ளது சோச்சி.

இங்கு குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் அடுத்த மாதம் 7ம் திகதி தொடங்குகிறது. இதை சீர்குலைக்க செசன்ய தீவிரவாதிகள் சதி திட்டம் தீட்டியுள்ளனர். இதனையடுத்து சோச்சி மற்றும் வோல்கோகிராட் நகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே ஒலிம்பிக் போட்டிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ள விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது ஒரு கழிவறையில் அடுத்தடுத்து 2 கழிவறைகள் பொருத்தப்பட்டுள்ளது.

பிபிசி நிருபர் ஸ்டீவ் ரோசன்பெர்க் என்பவர் கழிவறைக்கு சென்றுள்ளார், அப்போது பக்கத்துக்கு பக்கத்தில் 2 கழிவறைகள் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். அதை அப்படியே போட்டோ எடுத்து டுவிட்டரில் போட்டு விடவே, தீயாய் பரவி வருகிறது.

ரஷ்யாவில் ஓரின சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது, ஓரின சேர்க்கையாளர்களுக்காக ஒரே இடத்தில் 2 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று ஒருவர் ஜோக்கடித்துள்ளார்.

மற்றொருவர் ஜனாதிபதி புடின், பிரதமர் மெத்வதேவ் இருவருக்குமான கழிவறை என்று கூறியுள்ளார்.

இன்னொருவர் ஒருபடி மேலே சென்று ஒரு கழிவறையில் புடின் படத்தையும் ஒரு டாய்லெட்டில் மெத்வதேவ் படத்தையும் வைத்து வெளியிட்டு விட்டார்.

இன்னொருவர் புடின் கழிவறை செல்லும் போது பாதுகாப்பு செல்லும் அதிகாரிக்கும் சேர்த்து வைத்துள்ளனர் என்று ஜோக் எழுதி உள்ளார்.

ஆனால் ரஷ்யாவைச் சேர்ந்த ஆர் ஸ்போர்ட் செய்தி ஏஜென்சியின் எடிட்டர் வசிலி கோனோவ் விளக்குகிறார். அங்குள்ள கால்பந்து ஸ்டேடியங்களில் இப்படித்தான் எப்பவுமே கழிவறைகள் இருக்குமாம்.