வவுனியாவில் இரு பெண்கள் அதிரடியாக கைது!!

957

இரு பெண்கள் கைது..

வவுனியாவில் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தி ருட்டுச் ச ம்பவங்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய வவுனியா கு ற்றத்தடுப்பு பொலிஸார் இரு பெண்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா கு ற்றத்தடுப்பு பொலிஸில் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டுக்கமைய வவுனியா கு ற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பிரனீத் திஸாநாயக்க தலைமையில் மேற்கொள்ளப்பட்டு வந்த வி சாரணைகளின் அடிப்படையில், நேற்று மாலை வவுனியாவில் அடகு வைக்கும் இடத்தில் அடகு வைப்பதற்காக நகைகளுடன் சென்ற 23, 26 வயதுடைய இரு பெண்களை தி ருடிய நகைகளுடன் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் வவுனியா பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.