ஆ.லோகேஸ்வரன்

தேசிய பாடசாலையான வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் புதிய நிரந்தர அதிபராக ஆ.லோகேஸ்வரன் நிரல் கல்வி அமைச்சால் நியமிக்கப்பட்ட நிலையில் இன்றையதினம் (05.03.2020) காலை 8.00 மணியவில் அவரது கடமைகளை பொறுப்பேற்றார்.

பாடசாலை முன்றலிருந்து மாணவர்களின் பாண்ட் வாத்தியங்களுடன் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து புதிய அதிபருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

பாடசாலை வளாகத்தில் அமைந்துள்ள வித்தியா விநாயகர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் இடம்பெற்றிருந்தன. அதன் பின்னர் பாடசாலை கேட்போர் கூடத்தில் அறிமுக நிகழ்வும் இடம்பெற்றிருந்தது.

இந் நிகழ்வில் அதிபர் அமிர்தலிங்கம் , வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் வீ.இராதாகிருஷ்ணன், வலயக்கல்வி உயர் அதிகாரிகள், பாடசாலை சமூகத்தினர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





