வவுனியாவில் விசேட அதிரடிப் படையினரால் வெ டிபொருள் மீட்பு!!

609

மரக்காரம்பளை பகுதியில்..

வவுனியா – மரக்காரம்பளை பகுதியில் வீதியோரத்தில் காணப்பட்ட செல்லொன்று விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மரக்காரம்பளை வீதிக்கு அண்மித்த பகுதியில் ச ந்தேகத்திற்கிடமான பொருட்கள் இருப்பதை அவதானித்த பொதுமக்கள் இன்று காலை ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் தெரிவித்திருந்தனர்.

சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்ததுடன் அந்த இடத்தில் பா துகாப்பை பலப்படுத்தியிருந்தனர்.

இதேவேளை இன்று பிற்பகல் 3 மணியளவில் அப்பகுக்கு சென்ற மடுகந்தை விசேட அதிரடிப் படையினர் செல்லை அவ்விடத்திலிருந்து அகற்றி செயலிழக்க செய்திருந்தனர்.

குறித்த இடத்திற்கு அண்மித்த பகுதியில் முன்பு இராணுவ முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.