அநாவசியமாக வெளியில் செல்ல வேண்டாம் : நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!

622

மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தேவையற்ற வகையில் எந்தவொரு நபரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என அரச மருந்தக கூட்டுத்தாபனம், நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்தியாவசிய தேவையை தவிர்த்து வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என கூட்டுத்தாபனத்தின் தலைவரும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணருமான பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.

பொலநறுவை கந்தக்காடு தனிமைப்படுத்தும் நிலையத்தில் 10 பேருக்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளிலிருந்து வருவோரை தனிமைப்படுத்தும் நடவடிக்கை கடந்த ஒரு வாரமாகவே மேற்கொள்ளப்படுகின்றது. எனினும் அதற்கு முன்னர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படாமல் வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

அவ்வாறான நாடு முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் சென்றிருக்க கூடும். அவர்களால் கொரோனா தொற்று பரவுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

எனவே மிகவும் அவசியமான காரணங்களை தவிர்த்து யாருக்கும் வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம். உணவு தேவைகள் இருப்பின் ஒருவர் மாத்திரம் வெளியே சென்று உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.