இலங்கையில் விமான நிலையம் முழுமையாக மூடப்படுகிறதா? ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

565

ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தல் நடவடிக்கையின் கீழ் விமான நிலையத்தையும், துறைமுகங்களையும் மூடிவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையினை அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் ஜனாதிபதியிடம் முன்வைத்துள்ளது. இது தொடர்பில் மேலும் கூறுகையில்,

இதன் மூலமே முழுமையான கண்காணிப்பின் கீழ் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தலை செயற்படுத்த முடியும். இதேவேளை இந்த தொற்றை சிங்கப்பூரும், சீனாவும் எவ்வாறு கட்டுப்படுத்தின என்பதை கவனமாக ஆராய்ந்து அதன்படி செயற்பட வேண்டும்.

இத்தாலியில் இந்த நடவடிக்கை ஒழுங்காக செயற்படுத்தப்படாமை காரணமாகவே அங்கு பாரிய அழிவு ஏற்பட்டுள்ளது என மருத்துவ அதிகாரிகள் சம்மேளனம் சுட்டிக்காட்டியுள்ளது