வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் மக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!!

910

அந்தணர் ஒன்றியம்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை மாலை கொரனா வைரஸ்சில் இருந்து விடுபட அமைதியாக வழிபடுங்கள் என வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

எதிர்வரும் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை நேர பூஜையின் போதும், மாலை நேர இல்ல வழிபாட்டின் போதும் முழு உலகத்தையே அச்சுறுத்தி வருகின்ற கொரனா வைரஸ் நோயில் இருந்து விடுபடவும் பாதிக்கப்பட்டவர்கள் சுகமடையவும் வேண்டி அனைவரையும் பிரார்த்திக்குமாறு வேண்டுகின்றோம்.

குறிப்பாக வவுனியா முகாம்களில் இருந்து சிகிச்சை பெற்று வருபவர்கள் அதில் இருந்து விடுபட்டு அவர்களது குடும்பத்தினருடன் சேர்வதற்கும் பிரார்திக்குமாறு வேண்டுகின்றோம்.

இந்து ஆலயம் சார்ந்த நிகழ்வுகளை செய்கின்ற ஆலய பரிபாலன சபையினர் மற்றும் மதகுருமார் அனைவரும், மக்கள் அதிகமாக பங்கேற்கும் விழாக்களை தற்கால நிலமைக்கு ஏற்பவும் எம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையிலும், குறுகிய முறையிலும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.