வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் பரவாமல் விசேட நடவடிக்கை!!

617

விசேட நடவடிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் பரவமால் தடுக்கும் பொருட்டு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இன்று (18.03.2020) காலை தொடக்கம் விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நோயாளிகள் அமரும் கதிரைகள், தரை, மருந்து பெறும் இடம், வெளிநோயாளர் பிரிவு, நோயாளர் விடுதிகள், மலசலகூடம் போன்றவற்றை கிருமிநீக்கி மூலம் சுத்தப்படுத்தப்பட்டது. இன் நடவடிக்கை காலை, மாலை, இரவு என மூன்று வேளையும் தொடருமென வைத்தியசாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

இதைவேளை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் சிகிச்சை பிரிவு இன்று (18.03.2020) காலை 9.30 மணியளவில் வைத்தியசாலையின் பணிப்பாளர் கே.நந்தகுமாரன் தலைமையில் திறந்து வைக்கப்பட்டதுடன்,

சிகிச்சைப் பிரிவில் 24 மணி நேரமும் கடமையாற்றக்கூடிய வகையில் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஊழியர்களையும் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.