இலங்கை உட்பட அனைத்து நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்த உலக சுகாதார அமைப்பு!!

649

உலக சுகாதார அமைப்பு

இலங்கை உட்பட அனைத்து நாடுகளும் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவை போதுமானதா என்பது தொடர்பில் தெளிவில்லாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மலேசியா, இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு வருபவர்களை கட்டுப்படுத்த மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தெற்காசிய எல்லையில் மேலும் கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 500க்கு குறைவாக உள்ள போதிலும், அது அதிகரித்தால் முகங் கொடுக்க முடியாத நிலைமை ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் இதுவரையில் 185000க்கும் அதிகமான கொரோனா நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில் எட்டாயிரத்திற்கும் அதிகமான ம ரணங்கள் பதிவாகியுள்ளன.

இந்நிலையில் இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, பங்களாதேஷ் மற்றும் வடகொரியா போன்ற நாடுகள் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.