வவுனியாவில் மீன் டின் கொள்வனவுக்கு வரிசையில் நிற்கும் பொதுமக்கள்!!

866

வரிசையில் நிற்கும் பொதுமக்கள்..

ஒரு கிலோ கிராம் பருப்பு 65 ரூபாய்க்கும் மீன் டின் 100 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்ட விசேட அறிவிப்பினையடுத்து நாடளாவிய ரீதியில் பொதுமக்களின் கொள்வனவு அதிகரித்துள்ளது.

அதனையடுத்து வவுனியாவில் அமைந்துள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்களில் பொதுமக்கள் வரிசையில் நின்று மீன் டின் கொள்வனவில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சில வர்த்தக நிலையங்களில் மீன் டின் இருப்பு நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் வவுனியா பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையினர் திடீர் சோ தனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் மொத்த வியாபார நிலையங்களுக்கு சென்று சில்லறை வியாபாரிகளுக்கு பொருட்களை விநியோகம் செய்யுமாறும் பணிப்புரை விடுக்கப்படுகின்றது.