வவுனியா நகர் முழுவதும் பொலிஸார் மற்றும் இரானுவத்தினர் குவிப்பு : மாவட்ட செயலகத்தில் சோதனை நடவடிக்கை!!

708

வவுனியா நகர் முழுவதும்

வவுனியா மாவட்ட செயலகத்தினை சூழவுள்ள பகுதிகளில் 250க்கு மேற்பட்ட இரானுவத்தினர் மற்றும் பொலிஸார் பா துகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் ஏப்ரல் 25ஆம் திகதி இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல் இன்று (19.03.2020 நண்பகல் 12 மணியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையிலேயே குறித்த பா துகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபர் தம்மிக்க பிரியந்த, சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திஸ்சலால் த சில்வா, வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மானவடு ஆகியோரின் தலைமையின் கீழ் இந்த பா துகாப்பு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகம், இலுப்பையடி சந்தி, வைத்தியசாலை, அஞ்சல் அலுவலகம் போன்றவற்றிற்கு முன்பாக பொலிஸார் மற்றும் இரானுவத்தினரின் பா துகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் வவுனியா மாவட்ட செயலகத்தினுள் ஊடகவியலாளர்கள், வேட்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், தேர்தல் அலுவல்கள் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் தவிர்ந்த எவருக்கும் மாவட்ட செயலகத்தினுள் செல்ல பொலிஸாரினால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.