இலங்கையில்..

கொ ரோ னா வை ர ஸ் வெப்ப சூழ்நிலையில் பரவாது, எனினும் மழைக்காலத்தில் அதன் பரவல் அதிகமாக இருக்கும் என்று இலங்கையின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் தலைவர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஈரமான சூழ்நிலையில் அதன் பரவல் அதிகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஏதுக்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். என்ற போதும் இது புதிய வைரஸ் என்பதால் இதனை உறுதி செய்ய முடியவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

என்ற போதிலும் ஏனைய சூழ்நிலையை காட்டிலும் ஈரமான சூழ்நிலையில் இதன் பரவல் வேகமாக இருப்பதை அவதானிக்க முடிகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வரண்ட காலநிலை என்பதால் இந்த நோய் குறைந்தளவிலேயே பரவியுள்ளது என்ற முடிவுக்கு வர முடியும் என்று அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இன்று பிற்பகலில் நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேற்கு மாகாணங்களில் மழை பெய்யும் வாய்ப்புக்கள் உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. ஊவா, மட்டக்களப்பு அம்பாறையில் வரும் நாட்களில் இடியுடன் கூடிய மழை எதிர்பார்க்கப்படுகிறது.

பொலன்னறுவை, திருகோணமலை மாவட்டங்களில் இலேசான மழையும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறையில் சுமாரான மழையும் எதிர்பார்க்கப்படுவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. எதிர்காலத்தில் நாட்டில் மழையுடனான காலநிலை நீடிக்குமாயின் அது இலங்கைக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.





