இன்று அதிகாலையுடன் மூடப்பட்ட கட்டுநாயக்க விமான நிலையம்!!

856

விமான நிலையம்

கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று அதிகாலை முதல் மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று அதிகாலை 4.00 மணி முதல் உள்வரும் விமானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இன்று அதிகாலை 3.40 மணியளவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து வந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் – 198 ரக விமானம் தரையிறங்கியது. இந்நிலையில் இன்று முதல் 14 நாட்களுக்கு விமான நிலையத்தை மூட திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று வந்த விமானத்தில் 77 பயணிகள் வருகைத்தந்துள்ளனர். அவர்களில் அதிகமானோர் தம்பதிவ சென்ற பக்தர்கள் என விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்வரும் விமான சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்ட போதும், வெளியே செல்லும் விமானங்கள், சரக்கு விமானங்கள் வழமை போன்று செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வருவோரினால் நாட்டுக்குள் கொ ரோ னா வைரஸ் தீவிரமாக பரவி வருவதன் காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, விமான நிலையத்தை மூடுமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.