செவ்வாய்கிழமை வரை நீடிக்கப்படும் ஊரடங்குச் சட்டம் : ஜனாதிபதி செயலகம் அறிவிப்பு!!

784

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தை மேலும் இரண்டு நாட்களுக்கு நீடிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.

கொழும்பு, கம்பஹா, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கான ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி காலை ஆறு மணி நீடிக்கப்பட்டுள்ளது.

ஏனைய மாவட்டங்களுக்கு 23ஆம் திகதி காலை ஆறு மணிக்கு ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் பிற்பகல் 2 மணி தொடக்கம் 24ஆம் திகதி காலை 6 மணி வரை நீடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

24 ஆம் திகதி மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுவது தொடர்பில் அறிவிக்கப்படும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்படாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் செய்யும் பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அனுமதிக்குமாறு பொலிஸாருக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது.

மரக்கறி உட்பட அத்தியாவசிய பொருட்கள் போதியளவு கையிருப்பில் உள்ளமையினால் மக்கள் குழப்பம், பதற்றம் ஏற்படுத்திக் கொள்ளாமல் பெற்றுக் கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளும் அரசங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.