வவுனியா ஊடாக வடபகுதி நோக்கி பேரூந்துகளில் அழைத்துச் செல்லப்படும் கொரோனா தொற்று சந்தேக நபர்கள்!!

774

வவுனியா ஊடாக..

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகைதரும் பயணிகளை கொரோனா தொற்று ஆய்வுக்கு உட்படுத்தும் நடவடிக்கைக்கு வடமாகாணத்தின் பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு இன்று (22.03.2020) காலை 9.00 மணியளவில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் பாதுகாப்புடன் 8 பேரூந்துகளில் கொரோனா தொற்று ஆய்வுக்குட்படுத்தும் நடவடிக்கைக்கு 100க்கு மேற்பட்டவர்கள் தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதுடன் இரண்டு லொறிகளில் அவர்களின் பொருட்களும் எடுத்துச் செல்லப்படுகின்றது.

குறித்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்கள் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள தொற்று நோய் ஆய்வு நிலையத்திற்கு அழைத்து செல்லப்படுவதாக தெரியவருகின்றது.