
வெளிநாடுகளில் இருந்து வந்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கான தனிமைப்படுத்தல் கண்காணிப்புக்கு உட்படாமல் தவிர்ப்போர் தொடர்பில் காவல்துறையினரால் பிரசுரிக்கப்பட்ட பெண் ஒருவரின் புகைப்படம் ஒன்று தொடர்பில் காவல்துறையினர் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இந்த புகைப்படத்தில் இருப்பவரான சிராணி பீரிஸ் என்பவர் நேற்று காவல்துறைக்கு தொலைபேசியின் மூலம் தொடர்புக்கொண்டு தமது புகைப்படம் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

பன்னிப்பிட்டியவை சேர்ந்த இவர் மார்ச் 5ம் திகதியன்று இலங்கைக்கு வந்து மார்ச் 8ம் திகதியன்று பிரான்ஸூக்கு திரும்பிவிட்டார்.
எனவே அவரை தேடுவதை காவல்துறை கைவிட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். இந்த தவறுக்காக காவல்துறை மன்னிப்பை கோரியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.





