கணவருக்கு பிடித்த நடிகை போல் மாற முற்பட்ட பெண்ணுக்கு விளைந்த விபரீதம்!!

694

Tearசவுதி அரேபியாவில் தனது கணவருக்கு பிடித்த ஹொலிவுட் நடிகை கிம் கர்தாஷியான் போல மாற நினைத்து தலைமுடியமைப்பை மாற்றி, முகத்தை பிளாஸ்டிக் சேஜரி செய்து கொண்ட மனைவியை, கணவர் விவகாரத்து செய்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகை மீது வெறியாக இருந்த கணவரின் கவனத்தை தன் மீது திருப்ப நடிகை போலவே சிகை அலங்காரத்தை மாற்றிக் கொண்டு, முகத்தையும் பிளாஸ்டிக் சேஜரி செய்து கொண்டார் மனைவி.

இதனால் கணவர் தன் மீது அன்பு செலுத்துவார் என்று நினைத்தார் மனைவி ஆனால், மனைவியின் மாற்றத்தை வெறுத்த கணவர், அவரை விவகாரத்து செய்துவிட்டு உடனடியாக வேறொரு திருமணம் செய்து கொண்டிருப்பது அவரை பேரதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.