காரை இயக்கிய 5 வயது சிறுவன் : தாய், குழுந்தை படுகாயம்!!

547

Carஜேர்மனியில் ஐந்து வயது சிறுவன் காரை இயக்கியதால் அவனது தாயும், மற்றொரு குழந்தையும் காயமடைந்தனர்.

ஜேர்மனியின் புல்டா நகரில் 32 வயது பெண் தன் இரு குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு சென்றார்.

காப்பக வாசலில் காரை நிறுத்தி சாவியை அதிலேயே வைத்துவிட்டு இரண்டு வயது குழந்தையுடன் கீழிறங்கி மற்றொரு பெண்ணுடன் பேசிக்கொண்டிருந்தார். காரில் இருந்த ஐந்து வயது சிறுவன் காரை இயக்கவே எதிர்பாராமல் கார் முன்னோக்கி சென்றது.

காருக்கு வெளியில் பேசிக்கொண்டிருந்த அவனது தாய் வேகமாக கார் வருவதைக் கண்டு அருகில் இருந்த குழந்தையை பக்கவாட்டிலிருந்த புதரில் தள்ளிவிட்டு முன்னால் குதித்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த தாயையும் குழந்தையையும் அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.