ஞாயிற்றுக்கிழமை ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படுமா? வெளியான தகவல்!!

5058

ஊரடங்குச்சட்டம்..

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டத்தை அமுல் செய்வது தொடர்பில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஜனாதிபதி செயலகத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டம் நாளை அதிகாலை 4மணிக்கு தளர்த்தப்படும். இதனையடுத்து அனைத்து மாவட்டங்களிலும் நாளையில் இருந்து ஒவ்வொரு நாளும் இரவு 11 மணியில் இருந்து அதிகாலை 4மணிவரையில் ஊரடங்குச்சட்டம் அமுல் செய்யப்படவுள்ளது.

அத்துடன் அடுத்து கிழமையில் இருந்து முழுமையாக ஊரடங்குச்சட்டத்தை நீக்குவதற்கான கலந்துரையாடல் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.

-தமிழ்வின்-