8 குழந்தைபெற்றதால் இயக்குனருக்கு அபராதம்!!

630

Iyakunarஒரு குடும்பத்துக்கு ஒரு குழந்தை திட்டம் கடுமையாக அமல் படுத்தப்படுகிறது. கட்டுக்கடங்காத மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்தவே இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இருந்தாலும் அதையும் மீறி ஒரு சிலர் மறைமுகமாக ஒன்றுக்கும் மேற்பட்ட குழந்தையை பெறுகின்றனர்.

இந்த நிலையில் சீனாவின் புகழ்பெற்ற சினிமா இயக்குனர் ஷங் யிமோயுக்கு 6 குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. எனவே அவர் மீது வழக்கு தொடர்பட்டது.

அவரிடம் 9 குழுவினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த விசாரணை 6 மாதங்களாக நடந்தன.

முடிவில் அவருக்கு 1.2 மில்லியன் டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. இவரது வருமானத்தை கணக்கில் கொண்டு மிகப்பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.