கொரோனா வைரஸ் பரவல் பல நாடுகளில் அதிகரிக்கும் : WHO!!

1060

கொரோனா வைரஸ்..

கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது கட்டம் முன்னால் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.

உலகில் பல நாடுகளில் இந்த வைரஸ் பரவல் அதிகரிக்கும் என உலக சுகாதார அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மைக் ரயன் கூறியுள்ளார்.

இதனிடை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தியுள்ளதாக நியூசிலாந்து அறிவித்திருந்த நிலையில், அங்கு கொரோனா வைரஸ் தொற்றிய இரண்டு புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.