வவுனியாவூடாக தலைமன்னார் நோக்கி பயணிக்கும் மிகப் பெரிய ஊர்திகள்!!

1572

தலைமன்னார் நோக்கி..

இலங்கை மின்சார சபையுடன் இணைந்து காற்றாலையால் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்திற்கு வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில் திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகுதி காற்றாலைகள் வவுனியா – மன்னார் வீதியூடாக இன்று (05.07.2020) இரவு 9.00 மணியளவில் எடுத்து செல்லப்பட்டது.

மன்னாரில் பொருத்தப்படும் குறித்த காற்றாலைக்கான பாகங்களே இவ்வாறு இரவு நேரத்தில் மிகப்பெரிய ஊர்தியில் எடுத்துச் செல்லப்பட்டது.

குறிப்பாக வவுனியா – மன்னார் வீதி பல வருடங்களாக குன்றும் குழியுமாக காணப்பட்டு தற்போது வீதி செப்பனிடப்படும் பணிகள் ஆரம்பித்துள்ள நிலையில் இவ்வாறான பார ஊர்திகள் எடுத்துச் செல்லப்படுகின்றன.