பெண்ணாக மாறிய 72 வயது முதியவர்!!

596

OLD MAN

72 வயதுச் சீன முதியவர் ஒருவர் பெண்களின் ஹீரோவாக மாறி உள்ளார். இவர் எந்தவொரு வீர சாதனைகளையும் செய்து இருக்கவில்லை.

ஆயினும் பேரக் குழந்தைகளுக்கு நூதனமான முறையில் அறிவூட்டலை மேற்கொண்டு இருக்கின்றார். பேரக் குழந்தைகள் கல்லூரிக்கு உடை அணிந்து செல்ல வேண்டிய முறையை காண்பிக்கின்றமைக்காக இவரே ஒரு பெண்ணாக மாறி இருக்கின்றார்.

நவ நாகரிக உடை அணிந்து தோன்றி இருக்கின்றார். இவரது பேரக் குழந்தைகளில் ஒருவர் இத்தோற்றப்பாட்டை புகைப்படங்கள் பிடித்து இணையங்களில் வெளியிட்டமையை அடுத்து தாத்தா உலகப் பிரசித்தி அடைந்து விட்டார். குறிப்பாக பெண்களின் கதாநாயகனாக மாறி உள்ளார்.