கிளிநொச்சியில் விபத்து : இரு இளைஞர்கள் ப லி : ஒருவர் படுகாயம்!!

720

விபத்து..

கிளிநொச்சி, முறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் ப லியாகியுள்ளதுடன் மற்றுமொருவர் ப டுகா யமடைந்துள்ளார்.

இன்று மாலை 05 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் முறிப்பிலிருந்து கிளிநொச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்கள் சி க்கியு ள்ளனர்.

குறித்த பகுதியில் காணப்படும் வீதி வளைவில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோட்டார் சைக்கிள் வீதியை விட்டு விலகியதாலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரியவருகின்றது.

இதன்போது, 18 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்கள் ப லியாகியுள்ளதுடன் 20 வயதுடைய மற்றுமொரு இளைஞன் ப டுகாய மடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனை யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த விபத்தின்போது, கிளிநொச்சி காந்திகிராமம் பகுதியை சேர்ந்த 18 வயதான ஞானகுமாரன் கிருசாந்தன் உ யிரிழந்துள்ளதுடன், கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியை சேர்ந்த 20 வயதுடைய சர்வநாதன் பவிக்சன் படுகாயமடைந்துள்ளார்.

உ யிரிழந்த மற்றைய இளைஞன் தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் விபத்து தொடர்பான மேலதிக வி சாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருவதாகவும் அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.